நீயாக நான் மாறிவிட்டால்
துன்பங்கள் குறையுமோ?
துன்பங்கள்தான் வாழ்வை
வளமாக்கும் தூண்களாம்..
துன்பங்கள் அளவுக்கதிகமான
இன்பத்தின் குழந்தைகள்..
துள்ளி விளையாடும்
மீன்களுக்கில்லை துன்பம்..
மீனவன் வலைவீசும்வரை!!
காற்றில் அசைந்தாடும்
மலருக்கில்லை துன்பம்..
மங்கையின் கண்களில் படாதவரை!!
வளர்ந்து செழித்திருக்கும்
கரும்புக்கில்லை துன்பம்..
யானைகள் கூட்டம் வரும்வரை!!
புதுகவி பாடும்
கவிஞனுக்கில்லை துன்பம்..
மொழியின் அழிவுக்காலம் வரும்வரை!!
கிருஷ்ணனையே நினைக்கும்
மனதிற்கில்லை துன்பம்..
அவனை மறவாதவரை!!
எனக்கும் என்றும்
இல்லை துன்பம்..
நீ என்னை பிரியாதவரை!!
பிரியாத வரம் வேண்டும்!!!
Monday, July 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment